Visitors

hit counters

Saturday, May 21, 2016

தமிழின் எதிரி ராம்கோபால் வர்மா



1998 இல் ”ஜங்கிள் “படத்திற்காக ராம் கோபால் வர்மா முதுமலையில் ஷூட்டிங் செய்துகொண்டிருக்கும் போது வீரப்பனை பற்றின விபரங்கள் தெரிந்திருக்கிறது, ஒரு சாதாரண மனிதன் ஒரு சிறு படையை வெத்துக்கொண்டு காட்டிற்குள் ஒரு ராஜ்ஜியம் அமைப்பதும், இரண்டு மாநில காவல்துறையிடமும் சிக்காமல் தண்ணி காண்பித்ததும் அவரை வியக்க வைத்திருக்கின்றன. அதன் பின்னர் அவரைப்பற்றிய விபரங்களை சேகரித்து வீரப்பன் என்ற படத்தை இயக்கி இருக்கிறார்.

வீரப்பன் படத்தின் தமிழ் ட்ரைலர் வெளியீடு, மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ”வீரப்பன் பப்ளிசிட்டிக்காக அலைபவர்” என்று கூறியிருப்பதும், படத்தில் அவர் தன் சொந்த மகளையே கொன்றதாக சொல்லியிருப்பதும் பத்திரிக்கையாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதன் அடிப்படையில் என்று கேட்கையில் என்னிடம் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் தான் இதை எடுத்தேன் என்று சொல்கிறார்.  இதை பார்க்கும் போது அவணங்களை பார்த்த மாதிரி தெரியவில்லை அவணங்களையே அவர் தான் உருவாக்கியது போல தெரிகிறது.

தமிழில் படம் எடுக்காதது பற்றி பத்திரிக்கையாளரிடம் “எனக்கு தெரியாத மொழியில் என்னால் எப்படி படம் எடுக்க முடியும்” என்று சொல்லியிருக்கிறார். அவருக்கு தெரியாத மொழியில் படம் எடுக்க முடியாது என்றால் அவருக்கு முழுமையாக தெரியாத ஒருவரை வைத்து எப்படி படம் எடுக்க முடியும்.

கன்னட சூப்பர் ஸ்டார்  ராஜ்குமாரை கடத்தியபோது கூட வீரப்பன் தன்னை துன்புறுத்தவில்லை என்றும் தன்னை மரியாதையுடன் உபசரித்து அனுப்பியதாக குறிப்பிட்டிருந்தார். தூங்கியவனை எழுப்பி விடலாம் தூங்கின மாதிரி நடிக்குறவன எழுப்ப முடியாதுன்னு சொல்லுவாங்க. ராம் கோபால் வர்மா இன்னும் நடித்துகொண்டு தான் இருக்கிறார்.

ரங்கீலா, சத்யா படங்களின் மூலம் தனக்கென தனி முத்திரையை பெற்றவர் ராம் கோபால் வர்மா. சமீபத்தில் வெளிவந்த படங்கள் பெரிதாக சோபிக்காவிட்டாலும், ராம் கோபால் வர்மா என்ற பெயர் அவரை இன்னும் தக்க வைத்துக்கொண்டு இருக்கிறது.

தமிழையும் தமிழர்களையும் பகடைக்காயாக உருட்டும் நபர்களில் ராம் கோபார் வர்மாவும் சேர்ந்திருக்கிறார். அதையும் வெட்கமே இல்லாமல் திரையில் பார்த்துவிட்டு வீரப்பனை காரித்துப்பும் அடுத்த தலைமுறைக்காகவே இப்படி ஒரு படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. அதையும் தமிழ்நாட்டிலே வந்து தமிழர்கள் மத்தியிலேயே வீரப்பனை அவதூராக பேசும் அவலமும் நடந்தேறியிருக்கிறது..
இதன்பின்னர் கண்டிப்பாக பெரும் அரசியல் பிண்ணனி இருக்க வாய்ப்பிருக்கிறது.

தமிழர்கள் எவ்ளோ அடித்தாலும் தாங்குவார்கள் என்று ராம் கோபால் வர்மாவுக்கும் தெரிந்துவிட்டது.. நாளைக்கே திருப்பூர் குமரன் ஒரு பொம்பள பொருக்கி, வீரபாண்டிய கட்டபொம்மன் வெள்ளைக்காரனின் கைக்கூலி, தஞ்சை பெரிய கோவில் சோழர்கள் கட்டவில்லை என்று படமெடுத்தாலும் ஆச்சர்யமில்லை... 

No comments:

You may like this