Visitors

hit counters

Sunday, September 18, 2011

எதிரியை நண்பனாக்கும் அஜித்...தல போல வருமா!!!!!


ஏ.எம்.ரத்னம், அஜித்துக்கு சுமார் பதினைந்து கோடி கொடுத்திருக்கிறார் என கிசுகிசுக்கிறது கோடம்பாக்கம். ஆனால் பணம் கைமாறவில்லை. வெறும் வார்த்தையளவில்தான் இருக்கிறது இந்த விவகாரம் என்றும் தகவல் வருகிறது.


பல வருடங்களுக்கு முன் நடந்தபெப்ஸி படைப்பாளிகள் பிரச்சினையில் அஜித் பெப்ஸி தொழிலாளர்களுக்கு ஆதரவாக நின்றார். ஆனால் ஏ.எம்.ரத்னம் படைப்பாளிகள் பக்கம். இந்த நேரத்தில் ரத்னம் அஜித்தை வைத்து படம் எடுப்பதாக இருந்தது. பெரும் தொகை ஒன்றை முற்பணமாகவும் கொடுத்திருந்தார். அஜித் எதிரணிக்கு ஆதரவாக நின்றதில் கடுப்பான ரத்னம், நாளை விடிவதற்குள் ரூபாயை எண்ணி மேசையில் வைத்தால் சரி, இல்லையென்றால் நடப்பதே வேறு என்று கூறிவிட்டார்.



கோபத்தின் உச்சிக்கே சென்றார் தல. விடிவதற்குள் பணம் புரட்டலாம் என்றால், அன்றைய திகதியில் அவர் இவ்வளவு பெரிய ஸ்டாரும் இல்லை. எப்படியோ விடிய விடிய அலைந்து போராடி பணத்தை புரட்டிய அஜித், அதை திருப்பி கொடுத்துவிட்டு தன் கொள்கையில் உறுதியாக நின்றார். அதன்பின் அஜித்தின் உயரம் திரையுலகமே அண்ணாந்து பார்க்கிற அளவுக்கு உயர்ந்தது. யாருக்கு வேண்டுமானாலும் கோல்ஷீட் தருவேன். ஆனால் ஏ.எம்.ரத்னம் கம்பெனிக்கு மட்டும் கிடையவே கிடையாது என்றார் தல.



பதிலுக்கு அவரை நம்பி நான் இல்லை என்றார் ரத்னம். ஆனால் காலத்தின் கட்டளைக்கு கருங்கற்கள் கூட புழுதியாக மாறுவதை பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்...

அஜித்தோ, விஜய்யோ(யோகன் அத்தியாம் ஒன்று திரைப்படத்தை முதலில் ஏ.எம். ரத்னம்தான் தயாரிப்பதாக இருந்தது ஆனால் இடையில் புகுந்து குட்டையை குழப்பிவிட்டார் கௌதம் மேனன்.) கைகொடுத்தால்தான் பழைய படி நிமிர முடியும் என்ற நிலையில் இருக்கிறார் ஏ.எம்.ரத்னம். இந்த நேரத்தில்தான் தானே அழைத்து இந்த வாய்ப்பை கொடுத்தாராம் அஜித்.


இதைத் தொடர்ந்து தற்போது ஏ.எம். ரத்னம் தயாரிக்கவுள்ள இந்தப் படம் விஷ்ணுவர்தனுக்கா அல்லது இயக்குநர் விஜய்க்கா என்ற கேள்வி எழுந்துள்ளது.

எப்படியும் வரும் வாரத்தில் இதை தெளிவாக்கிவிடுவார் 'தல' என்கிறது தயாரிப்பாளர் தரப்பு!

தல தல தாம்பா... தல போல வருமா!!!!!


நன்றி--தமிழ் கிரியேஷன்...

No comments:

You may like this