யாகூ வை பின்னுக்கு தள்ளிய பேஸ்புக்

இத்தனை நாளாக அமெரிக்காவின் ஜாம்பவானாக இருந்த யாகூவை பின்னுக்கு தள்ளி விட்டு இரண்டாவது இடத்திற்கு வந்துவிட்டது பேஸ்புக்(FACEBOOK)...



2008 க்கு முன்புவரை அமெரிக்காவிலேயே முதல் இடத்தில் இருந்த இணையதளமான யாகூ வை கூகிள் பின்னுக்கு தள்ளி இன்று வரை முதல் இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது...இப்போது அந்த இரண்டாவது இடத்திற்கும் ஆப்பு வைத்து விட்டது பேஸ்புக்...இப்போது பாவம் மூன்றாவது இடத்தில் இருக்கிறது...


பேஸ்புக் என்ன என்பது நம் எல்லாருக்கும் தெரியும்...ஆர்கூட் போல அதும் ஒரு சமூக இணைப்பு இணையத்தளம்...இதை உருவாக்கியவர் கேம்ப்ரிட்ஜ் பழ்களைக்கலகத்தைச் சேர்ந்த மார்க் ஜோகேர்பெர்க் (Mark Zuckerberg) என்ற 19 வயது  இளைஜன்...(இப்போது 25 வயது)...
 


எனக்கு தெரிந்து இவளவு சிறிய வதில் இரண்டு பில்லியன் சம்பாதிக்கும் இளைஞன் அவர் தான்...(வேறு யாரேனும் இருந்தால் சொல்லுங்கள்)...சாதிக்க வயது ஒரு தடை என்பதற்கு இவரும் ஒரு உதாரணம்...சரி இப்போது விஷயத்துக்கு வருவோம்...

பொதுவாக தேடல்போறிகளில் மிக முக்கியமான இணையத்தளம் என்றால் அது யாகூ,கூகிள் இரண்டு தான்...முதலில் கூகிள் சற்று பின்தங்கி இருந்தது உண்மை தான்...ஆனால் தன் யுத்திகளால் மீண்டும் முன்னேறி யாஹூ வை பின்னுக்கு தள்ளியது...
கூகிள் ஏன் ?

இப்போது நமக்கு ஒரு விஷயம் தெரிய வேண்டும் என்றால் பெரும்பாலோர் உடனே செல்வது www.google.com தான்...காரணம் விரைவான தகவல் சரியான தகவல் நாம் கொடுக்கும் கீ (Keyword) வார்த்தைகளைக்கொண்டு தருவது கூகிள் மட்டுமே என நாம் அதன் மீது வைக்கும் நம்பிக்கை...
இன்னொரு முக்கியமான அம்சம் என்னவென்றால் அதன் முகப்புதிரை (Homepage)...
30 KBPS வேகம் இருக்கும் ஒரு நத்தை கணினியிலும் கூகிள் வேகமாக வேலை செய்யும்படி அதன் முகப்பு மிகவும் சிறிதாகவும் எளிமையானதாகவும் வடிவமைக்கப்பட்டு இருப்பது...ஆனால் அதை யாஹூ தவறிவிட்டது...விளம்பரங்கள் அது இது லொட்டு லொசுக்கு என அனைத்தையும் கொட்டி விட்டது யாஹூ...ஆனாலும் அத்தனை விபரங்களும் விரைவாக திறக்கும் படி யாஹூ செய்தாலும் அது பயனளிக்காமல் போனது...

இப்போது யாஹூக்கு புது எதிரி...பெயர் பேஸ்புக் ...இனி என்னை செய்ய போகிறது யாஹூ...எப்படியும் புதிய Offer அது இது என எப்படியும் சமாளிக்க முயற்சி செய்யும்...இதைத்தானே கூகிள் முந்திய போதும் செய்தது...யாஹூ மெயில்ளையும் முந்தி சென்றுவிட்டது ஜீமெயில்..காரணம் யாஹூ வில் உள்ள ஸ்பாம் மெயில் என்னும் ஒரு விஷயமும் ஒரு காரணம்...இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்...இப்போது யாஹூவின் வாடிக்கையாளர்கள் இந்தியாவில் குறைந்து கொண்டே செல்கிறார்கள்...இன்னும் சரியுமா அல்லது மூன்றாவது இடத்தையாவது தக்க வைத்துக்கொள்ளுமா???இப்படியே போனால் யாஹூ வுக்கு ஊஊஊஊஊஊ!!!!!

Comments